| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 68 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5 | மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5 | வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய் நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய் மத்து,Mathu - மத்தாலே அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய தயிரும்,Thayirum - தயிரையும் நெய்,Ney - நெய்யையும் களவால்,Kalavaal - திருட்டு வழியாலே வாரி,Vaari - கைகளால் அள்ளி விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய் ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய் இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும் உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே! அத்த,Atha - அப்பனே! முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி இன்,In - இனிதான இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது முற்ற,Mutra - பூர்ணமாக வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |