திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 680 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
680பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 4
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
ஒண் பவளம் வேலை உலவு, On Pavalham Vela Uluvu - ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள், Than Pargadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும், Kan Thuyilum - யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன், Maayon - ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள், Kazhal Inaihal - இரண்டு திருவடிகளை
காண்பதற்கு, Kaanpadartharku - ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள், Pan Pakarum Vandu Inangal - இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து, Pan Paadum Vengadaththu - பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன், Senbagam Aay Nirkum Thiru Udayen Aaven - சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.