திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 681 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
681பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
பதவுரை Show / Hide
கம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும்
இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும்
ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.