| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 682 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 6 | மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே | மின் அனைய நுண் இடையார், Min Anaiya Nun Idaiyaar - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம், Urupasiyum Menakaiyum Annavar Tham - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின் பாடலொடும் ஆடல் அவை, Paadalodum Aadal Avai - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை ஆதரியேன், Aadhariyen - யான் விரும்ப வில்லை வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டம் தென்ன என பண் பாடும், Thenna Ena Pan Paadum - ” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற வேங்கடத்துள், Vengadaththul - திருமலையிலே அன்னனைய பொன் குவடு ஆம், Annanaiya Pon Kuvalu Aam - அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய அரு தவத்தன் ஆவேன், Aru Thavaththan Aavein - அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன். |