திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 685 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 9 | செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன | பதவுரை Show / Hideசெடி ஆய, Sedi Aay - செடி போல் அடர்ந்துள்ள வல் வினைகள், Val Vinaigal - கொடிய கருமங்களை தீர்க்கும், Theerkum - (ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற திருமாலே, Thirumaale - ஸ்ரீய:பதியான பெருமானே! நெடியானே, Nediyane - பெரியோனே! வேங்கடவா, Vengadavaa - திருவேங்கட முடையானே! நின் கோயிலின் வாசல், Nin Koyilin Vaasal - உனது ஸந்நிதியின் உள் வாசலிலே அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து, Adiyaarum Vaanavarum Arampaiyarum Kidandhu Iyankumpadi Aay Kidandhu - பாகவதர்களும் மற்றைத் தேவர்களும் உன் பவளம் வாய் காண்பேன், Un Pavalam Vaai Kaanbaen - உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன். |