திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 686 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
686பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 10
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன் அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
பதவுரை Show / Hide
உம்பரு உலகு, Umbaru Ulagu - மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ், Oru Kudai Keel - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு, Aandu - அரசாண்டு
உருப்பசி தன், Uruppasi Than - ஊர்வசியினுடைய
அம், Am - அழகிய
பொன் கலை அல் குல், Pon Kalai Al Kul - பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும், Petralum - அடையப் பெறினும்
ஆதரியேன், Aadhariyen - (அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான், Sem Pavalam Vayaan - சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான், Emperumaan - எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல், Thiruveengadam Ennum Pon Malai Mel - திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன், Edhenum Aaven - ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்