திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 687 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
687பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11
மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே
பதவுரை Show / Hide
கொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு
புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு
இறைஞ்சி, Irainji - வணங்கி
சொன்ன, Sonna - அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார், Vallaar - கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்
அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு.