திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 688 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 1 | தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே | பதவுரை Show / Hideவிரை குழுவும், Virai Kuzhuvum - பரிமளம் விஞ்சிய மலர், Malar - புஷ்பங்களை யுடைய பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற அம்மானே, Ammaane - ஸ்வாமியே! தரு துயரம், Tharu Thuyaram - (நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை தடாய் ஏல், Thadai Ael - நீயே களைந்திடா விட்டாலும் உன் சரண் அல்லால் சரண் இல்லை, Un Saran Allaal Saran Illai - உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை; ஈன்ற தாய், Eendra Thaai - பெற்ற தாயானவள் அரி சினத்தால், Ari Sinaththaal - மிக்க கோபங்கொண்டு அதனால் அகற்றிடினும், Agaridinum - (தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும் மற்று, Mattru - பின்பும் அவள் தன் அருள் ஏ நினைந்து அழும், Aval Than Arul Ae Ninaindhu Azhum - அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற குழவி யதுவே, Kuzhavi Yadhuve - இளங்குழந்தையையே போன்று இருந்தேன், Pondru Irundhen - ஒத்திரா நின்றேன். வித்துவக்கோடு என்பதற்கு, Viththu Vakkodu Enbatharku - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர். |