திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 689 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 2 | கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே | பதவுரை Show / Hideவிண் தோய் மதில், Vin Thoy Madil - ஆகாயத்தை அளாவிய மதில்கள் புடை சூழ், Pudai Soozh - எப்புறத்தும் சூழப் பெற்ற வித்துவக்கோடு அம்மா, Viththu Vakkodu Amma - திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்! காதலன் தான், Kaadhalan Thaan - கணவனானவன் கண்டார் இதழ்வனவே செய்திடினும், Kandaar Idhalvanave Seithidinum - பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும் கொண்டானை அல்லால் அறியா, Kondaanai Allaal Ariya - (தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி குலம் மகள் போல், Kulam Magal Pol - உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல் நீ கொண்டு ஆளாய் ஆகிலும், Nee Kondo Aalai Aagilum - என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும் உன் குரை கழலே, Un Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே கூறுவன், Koovuvan - சரணமாகக் குறிக் கொள்வேன் |