Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 69 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
69ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 6
காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.–1-5-6
காய மலர்,Kaaya malar - காயாம் பூப் போன்ற
நிறவா,Niravaa - நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்,Karu mugil pol - காள மேகம் போன்ற
உருவா,Uruvaa - ரூபத்தை யுடையவனே
கானகம்,Kaanagam - காட்டில்
மா மடுவில்,Maa maduvil - பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்,Kaaliyan - காளிய நாகத்தினுடைய
உச்சியிலே,Uchiyile - தலையின் மீது
தூய,Thooya - மனோஹரமான
நடம்,Nadam - நர்த்தநத்தை
பயிலும்,Pailum - செய்தருளின
சுந்தர,Sundara - அழகையுடையவனே!
என் சிறுவா,En siruvaa - எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்,Thungam - உன்னதமாய்
மதம்,Madham - மதத்தை யுடைத்தான
கரியின்,Kariyin - குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு,Kombu - தந்தங்களை
பறித்தவனே,Pariththavane - முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து,Aayam arindhu - (மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து
பொருவான்,Poruvaan - யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த,Ethir vantha - எதிர்த்து வந்த
மல்லை,Mallai - மல்லர்களை
அந்தரம் இன்றி,Antharam indri - (உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து,Azhiththu - த்வம்ஸம்செய்து
ஆடிய,Aadiya - (இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தான் இணையாய்,Thaan inaiyaai - திருவடிகளை யுடையவனே!
ஆய,Aaya - ஆயனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!