திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 694 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 7 | எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே | பதவுரை Show / Hideவான், Vaan - மேகமானது எத்தனையும் வறந்த காலத்தும், Ethanaiyum Varandha Kaalaththum - எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும் பைங் கூழ்கள், Paing Kuzhgal - பசுமை தங்கிய பயிர்கள் மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும், Maiththu Ezhundha Maamugile Paarthu Irukkum - கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்; அவை போல், Avai Pol - அப் பயிர்கள் போல. மெய் துயர் வீட்டா விடினும், Mei Thuyar Veetta Vidinum - தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும் அடியேன், Adiyen - உனக்கு தாஸனாகிய நான் என் சித்தம் உன் பாலே மிக வைப்பன், En Sittam Un Paale Mika Vaippan - என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன். |