திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 698 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
698பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 1
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன் மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே உன் தன் பொய்யை கேட்டு கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை ஆற்றில் வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே
பதவுரை Show / Hide
வாசுதேவா, Vasudevaa - கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர், Aer Malar Poo Kuzhal Aayar Maathar - அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலை யுடைய இடைப் பெண்கள்
எனை பலர் உள்ள, Ennai Paler Ulla - எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில், I Ooril - இந்தத் திருவாய்ப்பாடியில்
உன் தன் மார்வு தழுவுதற்கு, Un Than Maarvu Thazhuvutharku - உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே, Aasai Inmai Arindhu Arindhe - ஆசை யில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன் தன், Un Than - உன்னுடைய
பொய்யை கேட்டு, Poyyai Kaettu - பொய்யான வார்த்தைகளைக் கேட்டு (அவற்றை மெய்யென மயங்கி)
கூசி, Koosi - (யார் பார்த்து விடுகிறார்களோ வென்று) கூச்சமடைந்து
நடுங்கி, Nadungi - நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில், Yamunai Aatril - யமுநா நதியில்
வார் மணல் குன்றில், Vaar Manal Kunril - பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து, Un Varavu Paarthu - உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன், Pulara Nindren - போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.
புலர்தல், Pulardhal - பொழுது விடிதல்.