Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 70 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
70ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 7
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. –1-5-7
துப்பு உடை,Thuppu udai - நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்,Aayargal tham - இடையர்களுடைய
சொல்,Sol - வார்த்தையை
வழுவாது,Vazhuvaadhu - தப்பாமல்
ஒரு கால்,Oru kaal - ஒரு காலத்திலே
தூய,Thooya - அழகியதாய்
கரு,Karu - கறுத்திரா நின்றுள்ள
குழல்,Kuzhal - கூந்தலையுடையளாய்
நல் தோகை,Nal thogai - நல்ல தோகையையுடைய
மயில் அனைய,Mayil anaiya - மயில்போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா,Nappinnai than thiramaa - நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்,Nal - (கொடுமையில்) நன்றான
விடைஏழ்,Vidai ezh - ரிஷபங்களேழும்
அவிய,Aviya - முடியும்படியாக
நல்ல திறல் உடைய,Nalla thiral udaiya - நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே,Naadhan aanavane - அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே!
தன்,Than - தன்னுடைய
மிகு சோதி,Migu sothi - நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே
புக,Puga - செல்லும்படியாக
தனியே,Thaniye - தனியே
ஒரு,Oru - ஒப்பற்ற
தேர்,Ther - தேரை
கடலி,Kadali - கடத்தி
தப்பின,Thappina - கை தப்பிப்போன
பிள்ளைகளை,Pillaihalai - வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய,Thaaiodu kootiya - தாயோடு கூட்டின
என் அப்ப,En appa-en appane - என் அப்பனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!