திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 700 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
700பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 3
கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே வளர்கின்றதால் உன் தன் மாயை தானே
பதவுரை Show / Hide
மலர் கரு கூந்தல், Malar Karu Koondhal - புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான
ஒருத்தி தன்னை, Oruththi Thannai - ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து, Kadaik Kaniththu - கடைக் கண்ணால் பார்த்து விட்டு
ஆங்கே, Aange - அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்தி தன் பால் மனம் மருவி வைத்து, Oruththi Than Paal Manam Maruvi Vaiththu - வேறொரு பெண் பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு, Mattru Oruththikku - வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து, Uraiththu - உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு, Oru Paethaikku - வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து, Poi Kuriththu - (ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை, Puri Kuzhal Mangai Oruththi Thannai - கடை குழன்று சுருண்ட கூந்தலை யுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி, Punarthi - கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும், Avalukkum - அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை, Meiyyan Allai - பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய், Maruthu Iruththai - இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே, Un Valarththiyodae - நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை, Un Than Maayai - உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது, Valarkindrathu - வளர்ந்து வாரா நின்றன;
ஆல், Aal - அந்தோ!.