திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 701 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
701பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 4
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் ஆய மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதி யோடே நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே
பதவுரை Show / Hide
தாய் முலையில், Thaai Mulail - தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்
பால் அமுது இருக்க, Paal Amuthu Irukka - போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்)
தவழ்ந்து, Thavazhnthu - தவழ்ந்து கொண்டு
தளர் நடை இட்டு சென்று, Thalar Nadai Ittu Senru - தட்டுத் தடுமாறி நடந்து சென்று
பேய் முலை வாய் வைத்து, Pei Mulai Vaai Vaitthu - பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து
நஞ்சை உண்டு, Nanjai Undu - (அம்முலை மீது தடவிக் கிடந்த) விஷத்தை உறிஞ்சி அமுது செய்து
பித்தன் என்று, Piththan Endru - (இப்படி செய்தது காரணமாக) ‘பைத்தியக்காரன்’ என்று
பிறர் ஏச நின்றாய், Piraar Aesa Nindraai - அயலாரெல்லாரும் பரிஹஸிக்கும்படி நின்ற பிரானே!
யான், Yaan - நான்
ஆய் மிகு காதலொடு இருப்ப நீ, Aai Migu Kaadhalodu Iruppa Nee - மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ
யான் விட வந்த என் தூதியோடே, Yaan Vida Vantha En Thoodhiyodae - என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே
மிகு போகத்தை, Migu Pogaththai - நல்ல போக ரஸங்களை
நன்கு உகந்தாய், Nangu Ugandhaai - நன்றாக அனுபவித்தாய்
அதுவும், Adhuvum - அந்தச் செய்கையும்
உன் கோரம்புக்கு, nan - உனது தீம்புக்கு
ஏற்கும் அன்றே, nan - தகுந்திருக்குமாய்த்து