திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 702 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
702பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 5
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு போகின்ற போது நான் கண்டு நின்றேன் கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ? இன்னம் அங்கே நட நம்பி ! நீயே
பதவுரை Show / Hide
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு, nan - மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய், nan - நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை, nan - பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு, nan - முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே, nan - என் வீதி வழியே
போகின்ற போது, nan - (அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன், nan - நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:
கண்ணுற்றவளை, nan - கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு, nan - (உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும், nan - (இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன், nan - பார்த்துக் கொண்டு தானிருந்தேன்;
அவளை விட்டு, nan - அந்தப் பெண் மணியை விட்டு
இங்கு, Ingu - என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய், nan - ஏதுக்காக வந்தாய்!
நம்பி, nan - ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட, nan - இனி மேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.
என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல், nan - முட்டாக்கு )