திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 703 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
703பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 6
மற்பொரு தோள் உடை வாசுதேவா ! வல்வினையேன் துயில் கொண்டவாறே இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்? எம்பெருமான்! நீ எழுந்து அருளே
பதவுரை Show / Hide
மல் பொரு தோள் உடை வாசுதேவா, nan - மல்லரோடு போர் செய்த தோள்களை யுடைய, கண்ணபிரானே!
வல் வினையேன், Val Vinaiyen - மஹாபாவியான நான்
துயில் கொண்டவாறே, nan - தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே
இற்றை இரவு இடை ஏமத்து, Ittai Iravu Idai Aemathu - அன்றிரவு நடுச் சாமத்திலே
இன் அணைமேல், In Anmaimel - இனிய படுக்கையிலே
என்னை இட்டு, Ennai Ittu - என்னைப் படுக்க விட்டு
நீ அகன்று போய், Nee Aghandru Poi - நீ விலகிப் போய்
அற்றை இரவும் (அகன்று போன), Atrai Iravum Aghandru Pona - அன்றிரவும்
ஓர் பிற்றை நாளும், Oru Pitrai Naalum - அதற்கு மறுநாளும்
அரிவையரோடும், Arivaiyarodum - (எல்லாப் ) பெண்களோடும்
அணைந்து வந்தாய், Anaindhu Vandhai - கலவி செய்து வந்தாய்;
நீ, Nee - இப்படிப்பட்ட நீ,
என் மருங்கில் எற்றுக்கு வந்தாய், En Marungil Etrukku Vandhai - என்னருகில் ஏதுக்காக வந்தாய்!
எம்பெருமான், Emperumaan - என் நாயகனே!
நீ எழுந்தருள், Nee Ezhundharul - நீ (அவர்களிடமே) போகக் கடவை.
வல்வினையேன், Valvinaiyen - நீ என்னை ஒருத்தியையே விரும்பி மற்றையோரைக் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதற் குறுப்பான