திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 704 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
704பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 7
பைய அரவின் அணை பள்ளியினாய் ! பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும் மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வர ஒழி நீ செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பி !
பதவுரை Show / Hide
பை அரவு இன் அணை பள்ளியினாய், Pai Aravu In Anai Palliyinai - பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி, nan - பூர்ணனானவனே!
நாம், Naam - நாங்கள்
பண்டையோம் அல்லோம், Pandaiyom Allom - உன் மாயைப் பேச்சு வலையில் அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல
நீ உகக்கும், Nee Ugakkum - நீ விரும்பத் தக்கவர்களாய்
மை, Mai - மையணிந்து
அரி ஒண், Ari On - மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம், Kanninaarum Allom - கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி, Vaiki - கால விளம்பஞ் செய்து
எம் சேரி, Em Cheri - எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ, Varavu Ozhi Nee - வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும், Seyya Udayum - அழகிய பீதாம்பரத்தையும்
திரு முகமும், Thiru Mugamum - திரு முக மண்டலத்தையும்
செம் கனி வாயும், Sem Kani Vayum - சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும், Kuzhalum - கூந்தல் முடியையும்
கண்டு, Kandu - பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய், Poi - உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும், Oru Naal Pattathe Amayum - ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம், Pulluvalam - க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே, Pesadhe - (மறுபடியும்) சொல்லாமல்
போகு, Pogu - (உன் தேவிமார்களிடத்தே) போய்ச் சேர்.
புள்ளுவம், Pulluvalam - வஞ்சகம்.