திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 705 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
705பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 8
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
பதவுரை Show / Hide
என்னை, Ennai - என்னை
வருக என, Varuga Ena - (இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு, Kurithittu - ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல், Inam Malar Mullaiyin Pandhar Neezhal - நிறைந்த மலர்களை யுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை, Manniya Valai - (வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு, Punar Pukku - ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு, Mattru Ennai Kandu - பிறகு என்னைப் பார்த்து
உழறா, Uzharah - கலங்கி
நெகிழ்ந்தாய், Negizhndhai - அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை, Pon Niram Aadai - பீதாம்பரத்தை
கையில் தாங்கி, Kaiyil Thangi - கையிலே தாங்கிக் கொண்டு
பொய், Poi - பொய்யாக
அச்சம் காட்டி, Acham Kaatti - நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும், Nee Pothi Aelum - நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம், Innam - இனி
ஈங்கு, Eengu - இங்கே
என் கை அகத்து, En Kai Akathu - என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல், Oru Naal Varudheel - ஒரு நாளாகிலும் வருவாயாகில் ( அப்போது)
நான் என் சினம் தீர்வன், Naan En Sinam Theervan - நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.
அதாவது,, Adhavadhu - மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும்