திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 706 | பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 9 | மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே | பதவுரை Show / Hideமங்கலம், Mangalam - மங்களகரமாய் நல், Nal - விலகூஷணமான வனமாலை, Vanamalai - வனமாலையானது மார்பில், Marbil - மார்விலே இலங்க, Ilanga - பிரகாசிக்க மயில் தழைப்பீலி, Mayil Thazhaippili - மயிலிறகுகளே சூடி, Soodi - சூடிக் கொண்டும் பொங்கு இள ஆடை, Pongu Ila Aadai - பளபளவென்ற மெல்லிய ஆடையை அரையில் சாத்தி, Araiil Saathi - அரையிலே சாத்திக் கொண்டும் பூ கொத்து, Poo Kothu - பூங்கொத்துக்களை காதில், Kaadhil - காதிலே புணரப் பெய்து, Punarap Peythu - மிகவும் பொருந்த அணிந்து கொண்டும் கொங்கு நறு குழலார்களோடு, Kongu Naru Kuzhalarkalodu - தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு குழைந்து, Kuzhaindhu - ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக) குழல், Kuzhal - புல்லாங் குழலை இனிது ஊதி வந்தாய், Inidhu Oothi Vandhai - போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்; ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும் எங்களுக்கே, Engalukke - எங்களுக்காக வந்து ஊத, Vandhu Ootha - வந்து ஊதும்படி உன் குழலின் இசை, Un Kuzhalin Isai - உனது குழலின் இசையானது போதராது, Potharathu - வர மாட்டாது காண். |