திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 707 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
707பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 10
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் எல்லி பொழுதினில் ஏமத்தூடி எள்கி வுரைத்த வுரையதனை கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான் குலசேகரன் இன் இசையில் மேவி சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே
பதவுரை Show / Hide
இள ஆய்ச்சிமார்கள், Ila Aaychchimargal - இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து, Alli Malar Thirumangai Kelvan Thannai Nayandhu - தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில், Elli Emapp Pozhudhinil - ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி, Oodi - ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி, Elgi - ஈடுபட்டு
உரைத்த, Uraitha - சொன்ன
உரை அதனை, Urai Adhanai - பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை, Kolli Nagarkku Irai - கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான், Koodal Koman - மதுரைக்கு அரசருமான
குல சேகரன், Kula Seakaran - குலசேராழ்வார்
இன் இசையில் மேவி, In Isaiyil Mevi - இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய, Solliya - அருளிச் செய்த
இன் தமிழ், In Tamil - பரம போக்யமான தமிழிலாகிய
மாலை, Maalai - மாலாரூபமான
பத்தும், Pathum - இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு, Solla Vallar Kku - ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை, Thunbam Illai - ஸம்ஸார துக்கம் அணுகாது.