Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 71 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
71ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 8
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-8
மன்னு,Mannu - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்,Kurungudiyai - திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்,Vellaraiyai - திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்,Mathil soozh - மதிலாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு,Solai malaikku - திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே,Arase - அதிபதியானவனே!
கண்ணபுரத்து,Kannapuraththu - திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே,Amudhe - அம்ருதம் போன்றவனே!
என் அவலம்,En avalam - என் துன்பங்களை
களைவாய்,Kalaivai - நீக்குபவனே!
உன்னை,Unnai - (மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்,Okkalaiyil - இடுப்பிலே
கொண்டு,Kondu - எடுத்துக் கொண்டு
தம் இல்,Tham il - தங்கள் அகங்களிலே
மருவி,Maruvi - சேர்ந்து
உன்னொடு,Unnodu - உன்னோடு
தங்கள்,Thangal - தங்களுடைய
கருத்து ஆயின செய்து,Karuthu aayina seythu - நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்,Varum - மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்,Kanniyarum - இளம்பெண்களும்
மகிழ,Magizha - (இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும்
கண்டவர்,Kandavar - (மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்,Kan - கண்களானவை
குளிர,Kulira - குளிரும்படியாகவும்
கற்றவர்,Katravar - (கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர,Thetri vara - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும்
பெற்ற,Petra - உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு,Enakku - என் விஷயத்திலே
அருளி,Aruli - கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;,Sengkirei aaduga - செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்,Ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்,Udaiyai - ஸ்வாமியானவளே!
ஆடுக ஆடுக-.,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!