திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 712 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 5 | மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே | பதவுரை Show / Hideநின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர, Nin Thiru Nettiyil Maruvum Sutti Asai Thara - உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும், Manivayidai Muththam Tharuthalum Unthan Thathaiya Polum - அழகிய வாயிலுண்டான வடிவு, Vadivu - (உன்) வடிவழகை கண்டு கொண்டு, Kandu Kondo - (நான்) பார்த்து உள்ளம் டீள் குளிர, Ullam Teel Kulira - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய செம் சிறு வாயிடை, Sem Siru Vayidai - சிவந்த சிறிய திருவாயிலே விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும், Viralai Serthu Veguliyai Nindru Uraikkum A Uraiyum - விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன், Ondrum Thiru Ileen Pettrileen - ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை. தெய்வ நங்கை எசோதை, Deiva Nangkai Eshodhai - ‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாளே, Ellam Pettraale - அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!. வெகுளியாய் நின்று, Veguliyai Nindru - சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம். |