Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 73 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
73ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 10
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-10
எங்கள் குடிக்கு,Engal kudikku - எங்கள் வம்சத்துக்கு
அரசே,Arase - ராஜாவானவனே!
செம் கமலம்,Sem kamalam - செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்,Kalazhil - திருவடிகளில்
சிறு இதழ் போல்,Siru idhazh pol - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்,Viralil - திரு விரல்களில்
சேர் திகழ்,Ser thigal - சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்,Aazhilgalum - திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்,Kin kiniyum - சதங்கைகளும்
அரையில் தங்கிய,Araiyil thangiya - அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்,Pon vadamum - பொன் அரை நாணும்
(பொன்) தாள,Pon thaal - பொன்னால் செய்த காம்பையுடைய
நல்,Nal - நல்லதான
மாதுளையின் பூவொடு,Mathulaiyin poovodu - மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்,Pon maniyum - (நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்,Mothiramum - திருக்கை மோதிரங்களும்
சிறியும்,Siriyum - (மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்,Mangalam - மங்களாவஹமான
ஐம்படையும்,Aimpadaiyum - பஞ்சாயுதமும்
தோள் வளையும்,Thol valaiyum - திருத் தோள் வளைகளும்
குழையும்,Kuzhaiyum - காதணிகளும்
மகரமும்,Magaramum - மகர குண்டலங்களும்
வாளிகளும்,Vaaligalum - (திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்,Suttiyum - திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து,Othu - அமைந்து
இலக,Ilaga - விளங்கும்படி
ஆடுக. ஆடுக.,Aaduga aaduga - ஆடுக. . . ஆடுக.