திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 736 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
736பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 7
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே
பதவுரை Show / Hide
தூ மறையீர், Thoo Maraiyir - நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே, Sumandhiranae - (ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே, Vachittanae - ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே (உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி, Poo Maruvum Naru Kunchi - புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து, Pun Sadai Aa Punaindhu - விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல், Poo Thugil Ser Alkul - நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து, Kaamar Ezhil Vizhal Uduthu - காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது, Kalan Ani Yaadhu - திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி, Angangal Azhagu Maari - இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான், Aemaru Thol En Puthalvan Thaan - ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல், Yaan Indru Sela Thakka Vanam Serthal - நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ, Thagavoe - தகுதி தானோ!
நீரே சொல்லீர், Neere Solliir - (தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்