திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 739 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
739பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 10
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே!
பதவுரை Show / Hide
மனுகுலத்தார் தங்கள் கோவே, Manukulathar Thangal Kove - மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல், Then Nagu Maa Malar Koondhal - தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும், Kausalayum - கௌஸல்யையும்
சுமித்திரையும், Sumithirayum - ஸுமித்ரையும்
சிந்தை நோவ, Sindhai Nova - மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு, Koon Uruvin Kodum Thozuthai Sol Ketta Kodiyaval Than Sol Kondu - வக்ரமான வடிவம் போலவே
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த, Kaanagame Miga Virumbi Indru Nee Thurandha - காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை, Valam Nagara - (உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து, Naanum Thurandu - நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன், Vaanagame Mika Virumbi Pokingren - மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.
கூனுருவின் = இன், Koonuruvin In - ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையே யன்றி வளைவுமாதலை
தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு, Thozhuthai Thozhumpana Enbathin Penpaal Maanu - ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.