Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 74 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
74ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11
அன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்,kuRalum - வாமந ரூபியாயும்
ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும்
ஆனவனே,aanavane - அவதரித்தவனே!
ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு
நாயகனே,naayakane - தலைவனானவனே!
என் அவலம்,en avalam - என் துன்பத்தை
களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே!
செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று
அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்,maDavaal - நற்குணமுடையளான
அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே
உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட
பரிசு,parisu - ப்ரகாரத்தை
ஆன,aana - பொருந்திய
புகழ்,pugazh - புகழை யுடையரான
புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார்
உரைத்த,uraittha - அருளிச் செய்த
இன் இசை,in isai - இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான
இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள்
உலகில்,ulakil - இந்த லோகத்தில்
எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்,pugazh - கீர்த்தியையும்
மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும்
எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள்.