திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 741 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
741பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே
பதவுரை Show / Hide
அம் கண், Am Kan - அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள், Nedu Mathil - உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும், Ayothi Ennum - அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து, Ani Nagaratthu - அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும், Ulaku Anaithum - ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி, Vilakkum Sothi - விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு, Vem Kathiron Kulaththukku - ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி, Oru Vilakku Aay Thonri - ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும், Vin Muzhudhum - தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட, Uyak Konda - துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை, Veeran Thannai - மஹாவீரனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை, Nedu Karu Mukilai - பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை, Iraman Thannai - ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள், Thillai Nagar Thiru Chithra Koodam Thannul - தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை, Engal Thani Muthalvanai - எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை, Em Perumaan Thannai - எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள், Kan Kulira Kaanum Naal - கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ, Endru Kol O - எந்நாளோ!