திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 750 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
750பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 10
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே
பதவுரை Show / Hide
அன்று, Anru - (தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை, Sara Asarangalai - (அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி, Adal Aravam Pagai Aeri - வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று, Asurar Thammai Vendru - அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற, Ilangum Ani Nedu Thol Naangum Thondra - (அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
விண் முழுதும், Vin Muzhudhum - பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர, Edhir Vara - எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று, Than Thaamam Mevi Sendru - தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த, Inidhu Veetirundha - (தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி, Ammaan Thannai Thillai Nagar Thiru Chithrakoodam Thannul Endrum Nindraan Avan Ivan Endru Aethi - ஸர்வேச்வரனை (அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
தொண்டீர் நீர், Thondir Neer - அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும், Naalum Eppozhudhum - தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின், Irainthu Min - வணங்கி உஜ்ஜீவியுங்கள் (ஏ – இசைநிறை.)