| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 751 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 11 | தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே | திறல் விளங்கும், Thiral Vilangum - பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற மாருதியோடு, Marudiyodu - அனுமானுடனே அமர்ந்தான் தன்னை, Amarnthaan Thannai - நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ, Ellai Ilseer Thayaratthan Than Magan Aayi Thonrihtru Adhu Muthal Aa Than Ulagam Pukkadhu Eeru Aa - அழிவில்லாத (ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து) கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த, Kol Iyallum Padai Thaanai Kotrham Olvaal Kozhiyer Kon Kudai Kulashekaran Sol Seitha - (பகைவர்களைக்) கொல்லுதல் நல் இயல், Nal Iyall - சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த இன் தமிழ் மாலை பத்தும், In Tamil Maalai Paththum - இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - கற்று வல்லவர்கள் நலம் திகழ, Nalam Thigazha - பரமபதத்தில் விளங்குகிற நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய அடிகீழ் நண்ணுவார், Adikeezh Nannuvaar - திருவடிகளிற் சேரப் பெறுவார்கள். |