திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 752 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
752ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 1
பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே
பதவுரை Show / Hide
பூநிலாய ஐந்துமாய், Poonilaaya Aindhumai - பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய், Punal Kan Nindra Naangumai - நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய், Theenilaaya Moondrumai - தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய், Sirandha Kaal Irandumai - சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி, Meenilaaya Thondrumagi - ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய், Veeru Veeru Thanmaiyaai - பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண, Neenilaaya Vanna - கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை, Ninnai - சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே, Yaar Ninaikka Valliire - ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்