திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 754 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
754ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 3
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய் ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே
பதவுரை Show / Hide
ஐந்தும், Aindhum - ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும், Aindhum - ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும், Aindhum - கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும், Aindhum - தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும், Moondrum - ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும், Ondrum - மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி, Aagi - (ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற, Alla Vattrulayaum Aay Nindra - கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!, Aadhithevaney - முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று, Andharathu Anaindhu Nindru - பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, Aindhum Aindhum Aindhum Aagi - அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை, Aindhum Aindhum Aay Ninnai - சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)