திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 757 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
757ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 6
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல் மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே
பதவுரை Show / Hide
நாகம் ஏந்தும் ஆக, Naagam Aendhum Aaga - திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே
நாகம் ஏந்து மேரு வெற்பை, Naagam Aendu Meru Verpai - ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும்
நாகம் ஏந்து மண்ணினை, Naagam Aendu Manninai - திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும்
நாகம், Naagam - சர்ப்பத்துக்கும் யானைக்கும் –
மாகம், Maakham - பரம பதத்தையும்
மாகம் ஏந்து வார் புனல், Maakham Aendu Vaar Punal - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும்
மாகம் ஏந்து மங்குல், Maakham Aendu Mangul - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும்
தீ ஓர், Thee Oru - ஓர் தீ -வைச்வானர அக்னியையும்
வாயு ஐந்து, Vaayu Ainthu - பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து, Amaindhu Kaathu - பொருந்தி ரஷித்து அருளி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று
நின் கணேயியன்றதே, Nin Kaneyiyandrathe - உன்னிடத்தில் தான் இருக்கின்றது –
முதலடியின் முதலிலுள்ள நாகம், Muthaladiyin Muthalilulla Naagam - நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***-  என்பது ச்ருதி.
அதற்கு மேல் நாகம், Adharku Mel Naagam - நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும்.
பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும், Bhoomiyanathu Aadhiseshanalum Thikkajangalalum Thaangappaduvadhal Irandavadiyilulla Naagamum - நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.)
முதல் மாகம், Muthal Maakham - பரமாகாசவாசகம்.
இரண்டாவது மாகம், Irandavathu Maakham - ப்ரஸித்தாகாசவாசகம்.
மூன்றாமடியிலுள்ள மாகமும், Moondramadiyilulla Maakamum - ஹோவா. என்ற வடசொல் விகாரமே.
ஏகமேந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி.
ஏகம், Egam - வன்கம்.
நின் கண்= கண், Nin Kan Kan - எழலுருபு.