| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 76 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 2 | பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட என்னரை மேல் நின்றிழிந்து உங்க ளாயர் தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி–1-6-2 | பொன்,Pon - ஸ்வர்ண மயமான அரை நாணொடு,Arai Naanodu - அரை நாணோடு கூட மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkin - (உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும் தன் அரை,Than Arai - தனக்கு உரிய இடமாகிய அரையிலே ஆட,Aada - அசைந்து ஒலிக்கவும் தனி,Thani - ஒப்பற்ற சுட்டி,Sutti - சுட்டியானது தாழ்ந்து,Thazhnthu - (திருநெற்றியில்) தொங்கி ஆட,Aada - அசையவும் என் அரை மேல் நின்று,En Arai Mel Ninru - என்னுடைய மடியிலிருந்து இழிந்து,Izhinthu - இறங்கிப் போய் உங்கள்,Ungal - உன்னுடைய (பிதாவான) ஆயர் தம் மன்,Aayar Tham Man - இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய அரை மேல்,Arai Mel - மடியிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய் மாயவனே,Maayavane - அற்புதமான செயல்களை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டியருள வேணும். |