| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 77 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 3 | பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல் நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3 | என்,En - என்னுடைய மணிவண்ணன்,ManiVannan - நீல மணி போன்ற நிறமுடையவனே! பல்,Pal - பலவகைப் பட்ட மணி,Mani - சதகங்களையும் முத்து,Muthu - முத்துக்களையும் இன் பவளம்,In Pavalam - இனிய பவழத்தையும் பதித்த,Pathitha - அழுத்திச் செய்யப் பட்டதும் அன்ன,Anna - அப்படிப்பட்டதுமான (அழகியதுமான) இலங்கு,Ilangu - விளங்குகின்ற பொன் தோட்டின் மேல்,Pon Thottin Mel - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே நின் மணி வாய் முத்து,Nin Mani Vaai Muthu - உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கும்படி (சிரித்துக் கொண்டு) நின் அம்மை தன்,Nin Ammaithan - உன் தாயினுடைய அம்மணி மேல்,Ammani Mel - இடையிலிருந்து கொட்டாய் சப்பாணி,Kottai Sappani - சப்பாணி கொட்டாய்-; ஆழி,Aazhi - திருவாழி மோதிரத்தை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |