திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 770 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
770ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 19
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே
பதவுரை Show / Hide
மின்கொள்  நேதமியாய், Minkol Nethamiyai - தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி, Pul Athu Aagi - ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும், Vedham Nankum - நான்கு வேதங்களையும்
ஓதினாய், Othinai - உபதேசித்தருளினாய்,
அது அன்றியும், Adhu Anriyum - அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து, Pullin Vaai Pilandhu - (உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும், Pul Kodi Piditha Pinnarum - பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை, Pullai - அப்பெரிய திருவடியை
ஊர்தி, Oorthi - வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால், Aadhalal - இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல், Kadal - திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய், Pullin Pagai Mey - கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல், Kidaththal - பள்ளிகொள்வதை
காதலித்தது, Kaadhaliththathu - விரும்பிப்போவதாகிய
என்கொல், Enkol - என்ன திருவுள்ளத்தாலே?