திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 781 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
781ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 30
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும் போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய் கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே
பதவுரை Show / Hide
வானகமும், Vaanagaththum - வானுலகத்திலுள்ளளாரயும்
மண்ணகமும், Mannagaththum - மண்ணுலகத்திலுள்ளாரையும்
ஏழ் வெற்பும், Ezhu Verppum - ஸப்தகுலபர்வதங்களையும்
ஏழ் கடல்களும், Ezhu Kadalgalum - ஸப்தஸாகரங்களையும்
போனகம் செய்து, Ponagam Seidhu - அமுது செய்து
ஆல் இலை துயின்ற, Aal Ilai Thuyinra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின்
புண்டரீகனே!, Pundareekane - தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே!
தேன் செய் அகம், Then Sei Akam - தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய்
தண், Than - குளிர்ந்ததாய்
நறு, Naru - பரிமளிதமான
மலர் துழாய், Malar Thuzhai - திருத்துழாயை
கல் மாலையாய்!, Kal Maalaiyaai - நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன், Koon - (கூனியினுடைய) கூனானது
அகம் புக, Aham Puga - உள்ளே யொடுங்கும்படி
தெறித்த, Theriththa - விட்டெறிந்த
கொற்றம் வில்லி அல்லையே, Kotrham Villi Allaiye - வெற்றி வில்லை யுடையவனான்றோ