| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 783 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 32 | குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே | குரங்கு இனம் படைகொடு, Kurangu Inam Padaikodu - வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு குரை கடலின் மீது போய், Kurai Kadalin Meedhu Poi - கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி அங்கு, Angu - அவ்விலங்கையிலுள்ள அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்கள் அரங்க, Aranga - அழியும்படி வெம் சரம், Vem Saram - தீக்ஷ்ணமான அம்புகளை துரந்த, Durandha - அவர்கள் மேல் பிரயோகித்த ஆதி, Ati - வீரர்களில் தலைவன் நீ, Ni - (எம்பெருமானே;) நீயே காண்க; இரக்க, Irakka - நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க மண்கொடுத்தவற்கு, Mankoduththavarku - உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு இருக்க, Irukka - குடியிருப்பதற்கு ஒன்றும் இன்றியே, Ondrum Indriye - ஒருசாண்நிலமும் மிகாதபடி பரக்க வைத்து, Parakka Vaiththu - (திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து அளந்து கொண்ட, Alandhu Konda - (மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட பற்பபரதன் அல்லையே, Parappabharathan Allaiye - தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண். |