திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 786 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 35 | அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே | பதவுரை Show / Hideஎன் இசனே, En Isane - எம்பெருமானே! (தேவரீர்) ஆழியார் தம் பிரானும் ஆகி, Aazhiyaar Tham Piraanum Aagi - திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து அம்பு உலாவும் மீனும் ஆகி, Ambu Ulaavum Meenum Aagi - ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும் ஆமை ஆகி, Aamai Aagi - ஆமையாகியும் (அவதரித்து) மிக்கது, Mikkathu - அதிசயத்தை அடைந்தருளிற்று அன்பு மிக்கது, Anbu Mikkathu - மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று; அன்றியும், Anriyum - இதற்கு மேலும் கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய், Kombu Araavu Nunmarungul Aayar Maathar Pillai Aayi - வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல், Embiraanum Aaya Vannam En Kol - எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!. |