| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 79 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 5 | புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5 | புட்டியில்,Puttiyil - திருவரையிற் படிந்த சேறும்,Serum - சேற்றையும் புழுதியும்,Puzhiyum - புழுதி மண்ணையும் கொண்டு வந்து,Kondu Vandu - கொணர்ந்து வந்து அட்டி,Atti - (என் மேல்) இட்டு அமுக்கி,Amukki - உறைக்கப் பூசி அகம் புக்கு,Agam Pukku - வீட்டினில் புகுந்து அறியாமே,Ariyamae - (எனக்கு நீ) தெரியாதபடி சட்டி தயிரும்,Satti Thairum - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் தடாவினில்,Thadavinil - மிடாக்களிலிருக்கிற வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும் உண்,Un - உண்ணுகின்ற பட்டி கன்றே,Patti Kanrae - பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே! சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; பற்ப நாபா,Parpa Naaba - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே! சப்பாணி கொட்டாய்-.,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-; |