Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 795 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
795ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 44
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே
பாலின் நீர்மை, Paalin Neermai - பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை, Sembon Neermai - சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, Paasiyin Pasumpuram Polum Neermai - பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை, Porpu Uday Thadathu Vandu Vindu Ulaam Neelam Neermai - அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த, Endru Ivai Niraintha - என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை, Kaalam Naankum Aam Maavin Neermai - நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம், Vaiyagam - இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது, Maraiththathu - திரஸ்கரித்தது
என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸ்வபாவம்!