| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 80 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 6 | தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6 | தந்தை,Thandai - (எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்,Sol - பேச்சை தாரித்து கொள்ளாது,Thariththu Kollaathu - (மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல் போர் உய்த்து வந்து,Poar Uyiththu Vandu - யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து புகுந்தவர்,Pugunthavar - (போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும் மண்,Mann - ராஜ்யத்தை ஆள,Aala - (தாமே) அரசாளுவதற்கு பாரித்த,Paariththa - முயற்சி செய்த மன்னர்,Mannar - அரசர்களுமாகிய நூற்றுவர்,Noorruvar - நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள் பட,Pada - மாண்டு போகும்படி அன்று,Andru - (பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே பஞ்சவர்க்கு,Panjavarkku - பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக) தேர் உய்த்த,Ther Uyiththa - (பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின கைகளால்,Kaigalal - திருக்கைகளாலே சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். தேவகி சிங்கமே,Devaki Singamae - தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |