திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 809 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 58 | மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே | பதவுரை Show / Hideமரம் கெட கடந்து, Maram Keda Kadandhu - யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று. மத்த யானை அடர்ந்து, Matha Yaanai Adarnthu - (குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து மத்தகத்து, Mathagathu - (அவ்வானையின்) தலைமேல் உரம்கெட புடைத்து, Uramkeda Pudaitthu - (அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து ஓர்கொம்பு ஒசித்த உத்தமர், Oorkombu Osiththa Uththamar - (அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே! துரங்கம், Thurangam - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனுடைய வாய்பிளந்து, Vaipilandu - வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே) மண் அளந்த பாத!, Man Alandha Paath - உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.) வேதியர் வசம் கொள, Vediyar Vasam Kol - வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு |