| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 81 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 7 | பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7 | பரந்திட்டு நின்ற,Parandhittu Nindra - (எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள படு கடல்,Padu Kadal - ஆழமான ஸமுத்ரமானது தன்னை இரந்திட்ட,Thannai Irandhitta - (வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த கை மேல்,Kai Mel - கையின் மேலே எறி திரை,Eri Thirai - வீசுகின்ற அலைகளினால் மோத,Modha - மோதி யடிக்க கரந்திட்டு நின்ற,Karandhittu Nindra - (முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த கடல்,Kadal - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன் கலங்க,Kalanga - கலங்கி விடும்படி சரம்,Saram - அம்புகளை தொட்ட,Thotta - தொடுத்து விட்ட கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். சார்ங்கம் வில்,Sargam Vil - ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை கையனே,Kaiyane - (அப்போது) கையில் தரித்தவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |