| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 82 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8 | குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8 | குரை,Kurai - கோக்ஷியா நின்ற கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம் அலிய,Aliya - அழிந்து போம்படி அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே! சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |