திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 830 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
830ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 79
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய் பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே
பதவுரை Show / Hide
பத்தினோடு பத்தும் ஆய், Paththinoadu Paththum Aay - பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய், Oru Ezhinodu Oru Onbathu Aay - ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய்
பத்து நூல் திசை கண் நின்ற, Paththu Nool Thisai Kan Nindra - பதினான்கு வகைப்பட்ட
நாடு, Naadu - லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற, Petra - பெறக்கூடிய
நன்மை ஆய், Nanmai Aay - நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு, Paththin Aaya Thotramodu - தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல்மிக்க, Aatralmikka - பொறுமையினாலே பூர்ணனான
ஓர் ஆதி பால், Oru Aadhi Paal - எம்பெருமான் விஷயத்திலே
பக்தர் ஆமவர்க்கு அலாது, Bhakthar Aamavarkku Aladhu - க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு)
மூர்த்தி, Moorthy - மோக்ஷபுருஷார்த்தம்
முற்றல் ஆகுமே, Muttral Aagume - பரிபக்வமாகுமோ?