திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 855 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
855ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 104
கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல் தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே
பதவுரை Show / Hide
கடு, Kadu - க்ரூரனான
கவந்தன், Kavandhan - கபந்ததென்ன
வக்கரன், Vakkaran - தந்தவக்த்ரனென்ன
கரன், Karan - கரனென்ன
முரன்  சிறை அவை, Muran Sirai Avai - முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த, Idandhu Koora Seitha - சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை, Palpadai Thadakai - பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே, Maayaney - பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும், Kidandhu Irundhu Nindru Iyangu Bodhum - படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன, Ninna - தேவரீருடைய
பொன்கழல், Ponkazhal - அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி, Thodarnthu Veelvu Iladhu Oru Thodarchi - இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும், Nalak Vendum - தந்தருளவேணும்.