திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 88 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
88பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 3
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய் பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும் மின்னில் பொலிந்த தோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும் தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ–1-7-3
பதவுரை Show / Hide
மின் கொடியும்,Min kodiyum - கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்,Or ven thingalum - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்,Sool - (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்,Parivedamum aai - பரி வேஷத்தையும் போல
பின்னல்,Pinnal - (திருவரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்,Thulanggum arasilaiyum - விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்,Peedhagam siru aadaiyodum - (இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்,Minnil - மின்னலினால்
பொலிந்தது,Polinthathu - விளங்குவதாகிய
ஓர்,Or - ஒப்பற்ற
கார் முகில் போல,Kar mugil pola - காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்,Kazhuthinil kaaraiyodum - கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த,Thannil polintha - (இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்,Irudheekesan - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)