Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 90 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
90ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 5
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல்
பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும்
தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5
முன்,Mun - முன்னே
நல்,Nal - அழகிய
ஓர்,Or - ஒப்பற்ற
வெள்ளி பெருமலை,Velli perumalai - பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்,Kuttan - குட்டி
மொடுமொடு,Modu modu - திடுதிடென்று
விரைந்து,Viraindhu - வேகங்கொண்டு
ஓட,Oda - ஓடிக்கொண்டிருக்க,
பின்னை,Pinnai - (அந்தப் பிள்ளையின்) பின்னே
தொடர்ந்தது,Thodarndhathu - (தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக) தொடர்ந்ததுமாகிய
ஓர்,Or - ஒப்பற்ற
கரு மலை,Karu malai - கரு நிறமான மலை பெற்ற
குட்டன்,Kuttan - குட்டி
பெயர்ந்து,Peyarnthu - தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்,Adi iduvathu pol - அடி யிட்டுப் போவது போல,
உலகம்,Ulagam - லோகமெல்லாங்கூடி
பன்னி,Panni - (தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி,Paravi - ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா,Ovaa - முடிவு காண முடியாத
புகழ்,Pugazh - கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்,Baladevan ennum - பலராமன் என்கிற
தன் நம்பி ஓட,Than nambi oda - தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்,Pin kooda selvaan - (அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)