திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 92 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
92பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 7
படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல் இடங்கொண்ட செவ் வாயூறி யூறி இற்றிற்று வீழ நின்று கடுஞ்சேக் கழுத்தின் மணிக் குரல் போல் உடை மணி கண கணென தடந்தாளினை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-7
பதவுரை Show / Hide
படர்,Padar - படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்,Pangayam malar - தாமரைப்பூ
வாய் நெகிழ,Vaai negizha - (மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
பனிபடு,Panipadu - (அதில் நின்றும் பெருகுகி்ன்ற) குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல,Siru thuli pola - (தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே
இடம் கொண்ட,Idam konda - பெருமை கொண்டுள்ள
செவ்வாய்,Sevvaai - தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி,Oori oori - (ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று,Itru itru veezha nindru - (நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே,Kadum se - கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்,Kazhuthil - கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி,Mani - மணியினுடைய
குரல் போல்,Kural pol - ஒலிபோலே
உடை மணி,Udai mani - (தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என,Kana kana ena - கண கண வென்றொலிக்க